மீண்டும் காதலில் விழுந்துள்ள திரிஷா? - டிவிட்டர் மூலம் தகவல்

Last Modified வியாழன், 5 ஜூலை 2018 (17:20 IST)
நடிகை திரிஷா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவு அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

 
தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகி திரிஷா தற்போது சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். இதனால், இவர் நடித்து முடித்த மோகினி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்கள் இன்னும் வெளியாகவில்லை.
 
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெளியூர் சுற்றுலா சென்றுள்ள திரிஷா அது தொடர்பான புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். 

 
இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் “ A table for Two" என பதிவிட்டு காதலின் சிம்பலை குறிக்கும் ஹார்ட்-இன் படத்தை போட்டுள்ளார். இதைக்கண்ட அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனது காதலுருக்காகவே அவர் டேபிளை புக் செய்துள்ளார் என அவர்கள் கூறி வருகின்றனர்.
 
தெலுங்கு நடிகர் ராணாவுடன் காதலில் இருந்தார் திரிஷா. ஆனால், அவர்கள் பிரிந்து விட்டனர். அதேபோல், தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்கவிருந்து, நிச்சயதார்த்தம் வரை சென்று பின் நின்று போனது. 
 
இந்நிலையில்தான், இந்த டிவிட்டை போட்டு மீண்ம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :