1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2015 (17:22 IST)

பணிப்பெண்ணுக்கு சூடு வைத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

சமையல் சரியில்லாததால் பணிப்பெண்ணுக்கு சூடு வைத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி மியன்மார் நாட்டைச் சேர்ந்த நாவ் மு டென் பாவ் என்ற பெண்மனி உட்லண்ட்சில் உள்ள ஒரு வீட்டில் பணிப்பெண் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, வீட்டு முதலாளி பணிப்பெண் தயாரித்த கறி திருப்தியாக இல்லாததால் நெருப்பில் காட்டி சூடாக்கிய கரண்டியால் பணிப்பெண்ணுக்கு சூடு வைத்துள்ளார்.
 
மேலும், செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில் சரியாக வடையை சமைக்காததால் பணிப்பெண்ணை அவர் உலக்கையால் தாக்கினார் என்ற குற்றச்சாட்டையும் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
 
வழக்கை விசாரித்த நீதிமன்றம், பணிப்பெண்ணுக்கு சூடு வைத்தும், உலோகக் கழியால் தாக்கியதற்காகவும் முதலாளிக்கு 15 மாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. நீதிமன்றத்தில் பணிப்பெண்ணை துன்புறுத்திய மூன்று குற்றச்சாட்டுகளையும் வீட்டு முதலாளி ஒப்புக்கொண்டார். இதனால், பணிப்பெண்ணுக்கு 4,900 வெள்ளியை அவர் இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.