செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 21 பிப்ரவரி 2022 (17:57 IST)

கப்பலில் பயங்கர தீ விபத்து: ஆடி கார் உள்பட 4000 கார்கள் தீயில் சாம்பல்!

கப்பலில் பயங்கர தீ விபத்து: ஆடி கார் உள்பட 4000 கார்கள் தீயில் சாம்பல்!
போர்ச்சுக்கல் நாட்டின் கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான சொகுசுக்கார்களை ஏற்றிச் சொல்லும் கப்பலில் திடீரென தீ பிடித்ததால் அந்த சரக்கு கப்பலில் உள்ள 4000 சொகுசு கார்கள் சாம்பலாகி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
போர்ச்சுகல் நாட்டின் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. இதனை அடுத்து இந்த கப்பலில் தீ மளமளவென பரவி கிட்டத்தட்ட முழுவதும் சேதம் ஆகிவிட்டது
 
இந்த கப்பலில் ஆடி கார் உள்ளிட்ட விலை உயர்ந்த 4000 சொகுசு கார்கள் இருந்ததாகவும் அந்த கார்கள் அனைத்தும் சாம்பலாகி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
மேலும் இந்த கப்பலில் பணி புரிந்த 22 பணியாளர்கள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு விட்டதாகவும் கப்பலில் இருந்த பொருட்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மீட்பு படையினர் கூறியுள்ளனர்