செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: சனி, 6 ஆகஸ்ட் 2016 (17:15 IST)

3 ஆயிரம் பேரை மனித கேடயமாக்கிய ஐ.எஸ். பயங்கரவாதிகள்

ஈராக்கில் 3 ஆயிரம் பேரை ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள்  பிடித்து வைத்து மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.


 

 
ஈராக்கில் பெரும் பகுதிகளை ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஈராக் ராணுவம் அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து போரிட்டு வருகிறது.
 
ஹவிகா மாவட்டத்தையும், அதை சுற்றியுள்ள பகுதிகளையும் கைப்பற்ற, அமெரிக்க போர் விமானம் மூலம் குண்டு வீச்சு நடந்தது. அதனால் அந்த பகுதி மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற தொடங்கினர்.
 
அவர்களை வெளியேற விடாமல் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 3 ஆயிரம் பேரை பிடித்து வைத்து மனித கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர். இத்தகவலை அங்குள்ள ஐ.நா. ஏஜென்சி தெரிவித்துள்ளது.