இளைஞரை அடைத்து வைத்து மூன்று நாட்கள் கற்பழித்த பெண்கள்!

இளைஞரை அடைத்து வைத்து மூன்று நாட்கள் கற்பழித்த பெண்கள்!


Caston| Last Modified செவ்வாய், 30 மே 2017 (10:59 IST)
தென் ஆப்ரிக்காவில் 22 வயது இளைஞர் ஒருவரை மூன்று பெண்கள் கடத்தி ஒரு அறையில் அடைத்து வைத்து மூன்று நாட்கள் கற்பழித்த சம்பவம் நடந்துள்ளது.

 
 
ஓர்டியல் என்ற 22 வயது இளைஞர் தென் ஆப்ரிக்காவில் உள்ள பிரீடோரியா என்ற நகரில் டாக்சி டிரைவராக பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் அவரது டாக்சியில் ஏறிய மூன்று பெண்கள் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி சென்றனர்.
 
கடத்தப்பட்ட அந்த இளைஞர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது ஒரு அறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அதன் பின்னர் அந்த இளைஞரை மூன்று பெண்களும் கற்பழித்தனர். மூன்று நாட்கள் டைத்து வைத்து அந்த இளைஞரை அவர்கள் மீண்டும் மீண்டும் கற்பழித்து பின்னர் விடுவித்தனர்.
 
அவர்களின் பிடியில் இருந்து ஒரு வழியாக வெளியே வந்த அந்த இளைஞர் காவல்துறையில் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்புடைய பெண்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :