1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 அக்டோபர் 2022 (15:38 IST)

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு! – 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!

Nobel
2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆல்ப்ரட் நோபல் நினைவாக பல்வேறு அறிவியல் சார்ந்த துறைகளுக்கும் நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 2022ம் ஆண்டில் அறிவியல் துறைகளில் சிறந்த பங்களிப்புகளை செய்தவர்களுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக மருத்துவம், இயற்பியல் துறைகளுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வேதியியல் துறைக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வேதியியல் பிரிவில் கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் உயிர் ஆர்த்தோகனல் வேதியியல் வளர்ச்சி குறித்த ஆய்வுக்காக கரோலின் பெர்டோசி, மோர்டன் மெல்டல், கே.பேரி ஷார்ப்லஸ் ஆகிய மூவருக்கு நோபல் விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.