செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (11:01 IST)

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 19 பேர் உடல் கருகி பலி

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.

 
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலியாகினர். காயமடைந்த மேலும் 32 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 19 மாடிகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திலும் பாதிக்கப்பட்டவர்களைக் காண முடிந்ததாக தீயணைப்புத் துறை ஆணையர் டேனியர் நீக்ரோ தெரிவித்தார்.
 
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத உயிரிழப்பு இது எனவும் அவர் கூறினார். மூன்றாவது தளத்தில் இருந்து தீப் பிடிக்கத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சில நாள்களுக்கு முன் பிலடெல்பியாவின் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.