1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (17:27 IST)

50 பைசாவுக்கு 15 ஆயிரம் ரூபாய்: அதிரடி அறிவிப்பு!

50 பைசாவுக்கு 15 ஆயிரம் ரூபாய்: அதிரடி அறிவிப்பு!
பழைய ஐம்பது பைசாவுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இங்கிலாந்து நாட்டின் பழைய 50 பைசா நாணயத்தின் ஒரு பக்கத்தில் இங்கிலாந்தில் உள்ள கியூ தோட்டம் இருக்கும் என்றும் இன்னொரு பக்கம் சீன பக்கோடா பொறிக்கப்பட்டு இருக்கும் என்பதும் இந்த நாணயம், மிக அரிய நாணயம் என்பதால் இந்த நாணயங்கள் அதிக விலைக்கு விற்பனையாகி வருகின்றன 
 
ebay என்ற இணையதளத்தில் இந்த 50 பைசா வைத்திருப்பவர்களுக்கு 142 பவுண்டுகள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த காசை வைத்து உள்ளவர்கள் இந்த இணையதளத்தின் மூலம் தொடர்புகொண்டு 15 ஆயிரம் ரூபாய் பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
கியூ தோட்டம் தொடங்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவை குறிக்கும் வகையில் இந்த நாணயங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது