1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (08:00 IST)

இலங்கையின் அடுத்த குண்டுவெடிப்பிற்கும் ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 300 பேர் பலியான நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் 50 மணி நேரம் கழித்து பொறுப்பேற்றது
 
இந்த நிலையில் நேற்று மீண்டும் இலங்கையில் உள்ள கல்முனை என்ற பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
 
இலங்கையில் உள்ள கல்முனை பகுதியில் நேற்று தீவிரவாதிகள் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அந்த வீட்டை ராணுவம் முற்றுகையிட்டது. இந்த  சண்டையில் அந்த வீட்டில் இருந்தவர்கள், தற்கொலைப்படை தீவிரவாதிகள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
 
அந்த வீட்டில் இருந்து ஏராளமான வெடி பொருள்கள், ஜெலட்டின் குட்சிகள், மடிக் கணினிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடந்த ஞாயிறு அன்று நடந்த  தேவாலய குண்டு வெடிப்பு தாக்குதலில் ஈடுபட்டதாகச் சிலரின் புகைப்படங்கள், அவர்கள் அணிந்திருந்த கறுப்பு நிற உடைகள் ஆகியவை அந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது