வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2016 (10:34 IST)

அவர் என்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டார்: டிரம்ப் மீது 11-வது பாலியல் புகார்!

அவர் என்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டார்: டிரம்ப் மீது 11-வது பாலியல் புகார்!

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழில் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார்.


 
 
இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இருவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக டொனால்ட் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் குவிந்து வருகிறது.
 
இதுவரை டொனால்ட் டிரம்ப் மீது 10 பாலியல் குற்றச்சாட்டுகள் வந்திருந்தது. இந்நிலையில் 11-வது பாலியல் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார் ஜெஸ்ஸிகா ட்ரகே என்னும் ஆபச பட நடிகை. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெஸ்ஸிகா 10 வருடங்களுக்கு முன்னர் கலிபோர்னியாவில் நடந்த கோல்ஃப் விளையாட்டு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த என்னை அங்கு வந்திருந்த டொனால்ட் டிரம்ப் தனி அறைக்கு அழைத்தார்.
 
அங்கு சென்றதும் டிரம்ப் என்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டு, தவறாக நடக்க முயற்சி செய்தார். அதற்காக எனக்கு பத்தாயிரம் டாலர்கள் வழங்க டிரம்ப் முன்வந்தார். ஆனால் நான் அதற்கு மறுத்துவிட்டேன் என கூறினார். மேலும் அதற்கு ஆதாரமாக டிரம்ப் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் ஜெஸ்ஸிகா வெளியிட்டுள்ளார்.
 
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை டிராம்ப் முற்றிலுமாக மறுத்துள்ளார். இவை எதிர் அணியினர் செய்யும் திட்டமிட்ட சதி என கூறியுள்ளார்.