1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 27 அக்டோபர் 2023 (20:55 IST)

105 குழந்தைகளை பெற்றெடுப்பதே இலக்கு.. 22 குழந்தைகளின் தாய் பேட்டி..!

26 வயதில் 22 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் மொத்தம் 105 குழந்தைகளை பெற்றெடுப்பதே தனது இலக்கு என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்ஜியா நாட்டில் 26 வயது பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ளனர். ஆனால் இதில் ஒன்பது வயது குழந்தையை மட்டுமே அவர் பெற்றெடுத்தார் என்பதும் மற்ற 21 குழந்தைகளையும் வாடகை தாய் மூலம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

58 வயதான தனது கணவர் பல ஹோட்டல்களை நடத்தி கோடீஸ்வரராக இருக்கிறார் என்றும் தனக்கும் தனது கணவருக்கும் 105 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இலக்கு என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அனைத்து குழந்தைகளையும் வாடகை தாய் மூலம் பெற்று எடுத்துக் கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் இன்னும் ஒரு சில வருடங்களில் 105 குழந்தைகளை பெற்றெடுத்து விடுவோம் என்றும் அவர் கூறியிருக்கிறார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இன்று புள்ளி

Edited by Siva