வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 10 மார்ச் 2023 (23:07 IST)

1000 ஆண்டுகால பழமையான புதையல் கண்டுபிடிப்பு

treasure
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் லோரென்சோ ருய்டர் 1000 ஆண்டுகால பழமையான புதையலைக் கண்டுபிடித்துள்ளார்.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் லோரென்சோ ருய்டர். இவருக்கு 10 வயதாக இருக்கும் போதிலிருந்து வரலாற்று ஆராய்ச்சியில் ஆர்வம் இருந்துள்ளது. அதன்பின்னர், அத்துறையில் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு நகரன ஹூக்வுட் என்ற பகுதிக்குச் சென்ற இவர்,. புதையல் எதுவும் இருக்கலாம் என்று தோன்றியதால், இவர் நிலத்தை தோண்டிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அந்த இடத்தில், கலைப்பொருட்கள் கிடைத்துள்ளது. மேலும், அங்குன் சேகரித்தபோது, அதிகளவில் பழமையான பொருட்கள் கிடைத்துள்ளன. எனவே  அந்த நிலம் முழுவதையும், டிராக்டர் கொண்டு தோண்டியுள்ளார்.

அதில், 1000 ஆண்டுகள் பழமையாக பொருட்கள் கிடைத்துள்ளன. இதைக் கண்டுபித்த ருய்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.  இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.