1. செய்திகள்
  2. 2014 -நிகழ்வுகள்
  3. உலகம் 2014
Written By Caston
Last Updated : வியாழன், 24 டிசம்பர் 2015 (18:20 IST)

பிரான்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலையில் மோதி 150 பேர் உயிரிழப்பு

பிரான்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலையில் மோதி 150 பேர் உயிரிழப்பு
ஸ்பெயினின் பார்ஸிலோனா நகரிலிருந்து 150 பேருடன் மார்ச் 24 ஆம் தேதி புறப்பட்ட செருமன்விங்ஸ் விமானம் பிரான்ஸில் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.


 
 
ஜெர்மனியைச் சேர்ந்த "ஜெர்மன்விங்ஸ்' நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ-320 ரக அந்த விமானத்தில் 144 பயணிகளும், விமானிகள் உள்பட 6 ஊழியர்களும் இருந்தனர். பயணிகளில் 67 பேர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள். ஸ்பெயின், துருக்கியைச் சேர்ந்தவர்களும் அந்த விமானத்தில் இருந்தனர்.
 
ஏர்பஸ் ஏ-320 ரக விமானம் 2015 மார்ச் 24 அன்று பிரான்சில் ஆல்ப்ஸ் மலையில் நீசூ நகரின் வடமேற்கே 100 கிமீ தொலைவில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 144 பயணிகளும், விமானிகள் உள்பட 6 ஊழியர்களும் உயிரிழந்தனர். துணை விமானியே விமானத்தை மலையில் மோதி விட்டதாக பிரான்ஸ் அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர்.