விநாயகர் துதி

Geetha Priya| Last Updated: வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (15:44 IST)
ஒளவையா‌ர் பாடிய விநாயகர் துதி
 
முஷிக வாகன மோதக ஹஸ்த
ஷ்யாமள கர்ண விளம்பித ருத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே
ஐந்து கரத்தனை ஆனைமகத்தனை
இந்தியினிளம்பிறை போலுமெயிற்றனை
நந்தி மகந்தனை ஞானக்கொழுந்தனை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
விநாயகர் அகவல்
 
சீதக் களபச் செந்தாமரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வண்ண மருங்கில் வளர்ந்தழ கெரிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு செந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு சுரமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த தரிய மெய்ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் முஷிக வாக
இப்பொழுதென்னை ஆட்கொள வேண்டி
தாயா யெனக்குத் தானெழுந்தருளி
மாயாப் பிறவி மயக்கமறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்துத் தெளிவாய்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகந்து
குருவடிவாகி குவலயத்தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடாவகைதான் மகிழ்ந்தெனக் கருளி
கோடாயுதத் தாற் கொடுவினை களைந்தே..
 


இதில் மேலும் படிக்கவும் :