1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. ‌விநாயக‌ர் சது‌ர்‌த்‌தி
Written By Sasikala
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2022 (17:41 IST)

விநாயகரை வீட்டில் எத்திசையில் வைத்து வணங்கவேண்டும்...?

Lord Ganesha
விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லோருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். விநாயகர் சதுர்த்தி பல இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.


விநாயகரின் தும்பிக்கை எப்போதுமே இடது பக்கமாக தன் தாயான கௌரி தேவியை பார்த்த வண்ணம் விநாயகரை வைக்க வேண்டும். இந்நாளில் விநாயகருடன் சேர்த்து கௌரி தேவியையும் பலரும் வைப்பார்கள். விநாயகரின் தும்பிக்கை கௌரி தேவியை நோக்கி இடது பக்கமாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.

விநாயகரின் சிலையை பின்புறம் வீட்டில் உள்ள எந்தவொரு அறையையும் பார்த்தவாறு இருக்கக்கூடாது. விநாயகர், வளமையை தரும் கடவுளாகும். அவரின் பின்புறம் வறுமையை குறிக்கும். அதனால் தான் அவரின் பின்புறம் வீட்டிற்கு வெளிப்பக்கம் பார்த்தவாறு இருக்க வேண்டும்.

தென்புற திசையில் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது. வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசைகளில் தான் விநாயகர் சிலையை வைக்க வேண்டும். உங்கள் வீட்டின் பூஜையறையும் கூட தெற்கு திசையில் இருக்கக்கூடாது.

கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவற்றை நோக்கியும் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது. விநாயகர் சிலை உலோகத்தில் செய்திருந்தால், வட கிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும். மாடிப்படி இருக்கும் வீட்டில், கண்டிப்பாக மாடிப்படிக்கு அடியில் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது. இது உங்கள் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.