Daily Horoscope
✕

வாழைக்காய் கூட்டு

வாழைக்காய் கூட்டு

Written By Sasikala
Updated: செவ்வாய், 19 ஜூலை 2016 (17:36 IST)
பச்சை மிளகாய் - 6
தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
எண்ணை - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - 1 கீற்று


 
 
செய்முறை:
 
பயத்தம் பருப்பு (அல்லது) பச்சை பாசிப் பருப்பு 6 அல்லது 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். 
 
வாழைக்காயை தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், சீரகம் ஆகியவற்றை மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
 
குக்கரில் ஊற வைத்த பயிறை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 1 அல்லது 2 விசில் வரும் வரை வேக விடவும். வாழைக்காய் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து, அதிகப்படியான நீரை வடிகட்டி விட்டு, காயை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காய்த்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து தாளிக்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள வாழைக்காய், பயறு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும், தேவையானால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கிளறி விடவும். உப்பைப் போட்டு மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்து, இறக்கி வைக்கவும்.

சுவையான வாழைக்காய் கூட்டு தயார்....!
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

எல்லாம் காட்டு

உடல் ஆரோக்கியத்தை பேணும் அற்புத விதைகள்!.. வாங்க பார்ப்போம்...

நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

அடுத்த கட்டுரையில்
Show comments