Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான பன்னீர் பீஸ் மசாலா செய்ய !!

Written By Sasikala
Updated: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (18:27 IST)
தேவையான பொருள்கள்:
 
பிரஷ் பட்டாணி - 1 கப்
பன்னீர் - 2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
தனியாத்தூள் - 1 மேஜைக்கரண்டி 
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி 
கொத்தமல்லி தழை - சிறிது 
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையான பொருள்கள்:
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
முந்திரிப்பருப்பு - 10
கசகசா - 1 தேக்கரண்டி 
தாளிக்க தேவையான பொருள்கள்:
வெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
பட்டை - 1 இன்ச் அளவு 
கிராம்பு - 2

செய்முறை:
 
கசகசாவை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு அதோடு முந்திரிப்பருப்பையும் சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும். வெங்காயம், தக்காளி  இரண்டையும் தனித்தனியாக மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் பன்னீரை பொன் வறுவலாக வறுத்து எடுக்கவும். பின்னர் அதோடு சிறுது வெண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு போடவும். பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பச்சை  வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 
பிறகு அதனுடன் மிளகாய் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறவும். பிறகு பட்டாணி சேர்த்து கிளறி அதோடு ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
 
பட்டாணி நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள கசகசா, முந்திரிப்பருப்பு கலவையை சேர்த்து மசாலா கெட்டியானதும் நன்கு கொதித்து வந்ததும் பன்னீர் சேர்த்து ஒரு நிமிடம் வைத்து, பின்னர் கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும். சூப்பரான சுவையான பீஸ் மசாலா தயார். சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments