1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

கருவேப்பிலைப் பொடி செய்ய வேண்டுமா.. இதோ...

தேவையான பொருட்கள்:
 
கருவேப்பிலை - ஒரு கப்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்  - 4
மிளகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

 
செய்முறை:
 
எண்ணெய் விடாமல் கருவேப்பிலை சுத்தம் செய்து ஒரு கடாயில் போட்டு நன்கு வறுத்துகொள்ளவும். நன்கு வறுத்ததும் ஒரு தட்டில் கொட்டி கொள்ளவும். பின் அதே கடாயில் உள்ளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்.
 
வறுத்ததும் நன்கு ஆறவைத்து கொள்வும். மிக்ஸ்யில் கருவேப்பிலை சேர்த்து அரைக்கவும். பின் வறுத்து வைத்த பருப்பு, மிளகாய் வற்றல், உப்பு, பூண்டு, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். கருவேப்பிலை பொடி தயார். இவை இட்லி, தோசை, சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு கலந்து சாப்பிடலாம்.