புதன், 18 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 15 ஜூலை 2022 (16:58 IST)

செல்வம் மேலும் பெருக பணத்தை எங்கு வைக்கவேண்டும்...?

All Wealth
வடக்கு திசையில் வைக்க முடியாதவர்கள் மாற்றாக கிழக்கு திசையில் வைக்கலாம். கிழக்கிலும் செல்வம் பெருகுவதற்கான வாஸ்து சாஸ்திரம் இடம்பெற்றுள்ளன.


பணத்தை வைக்கும் இடத்தில் லக்ஷ்மி குபேர படத்தை, அல்லது எந்திரத்தை வைத்துக்கொண்டால் செல்வம் மேலும் பெருகும். தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் தங்களது இருக்கை ஆனது வட மேற்கு திசையை நோக்கியவாறு இருந்தால், பணம் வைக்கும் பெட்டி உங்களுக்கு இடது புறத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல் கிழக்கு திசையை நோக்கியவாறு இருக்கை இருந்தால் வலதுபுறத்தில் பணத்தை வைக்கும் இடம் அமைத்துக் கொள்வது நல்லது.

பணம் வைப்பதற்கான மிகச்சரியான திசை என்றால் வடக்கு திசை தான். அறையின் 4 மூலைகளில் கட்டாயம் பணத்தை வைக்கக்கூடாது. அதாவது வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு போன்ற மூலைகளில் பணத்தை வைப்பது கூடாது. தெற்கு திசையும் முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

பணம் வைத்திருக்கும் இடமானது நுழைவு வாயிலை பார்த்தவாறு கட்டாயம் இருக்கக் கூடாது. வீட்டிற்குள் நுழையும் மற்றவர்களின் கண்களுக்கு நேரடியாக படாதபடி இருக்கவேண்டும். அதேபோல் பூஜையறையில் சிலர் பணத்தை வைத்திருப்பார்கள். இதுவும் தவறான முறையாகும். பணம் வைத்திருக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக பார்த்து கொள்ள வேண்டும். பூச்சிகள் வரும்படி விட்டுவிட கூடாது.

பணம் வைத்திருக்கும் பெட்டியில் எப்போதும் 1 ரூபாய் நாணயம் ஒன்று இருக்க வேண்டும். நீங்கள் உபயோகப்படுத்தும் மணி பர்ஸிலும் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்திருங்கள்.

பணம் என்பது நிலையான ஒரு பொருள் அல்ல. இன்று இருக்கும் நாளை இல்லாமல் போகும். மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் சம்பாதிக்கும் பணம் வீண் போவதில்லை. ஈட்டிய செல்வத்தை நிலைக்குமாறு வழி செய்து கொள்ளுங்கள்.