வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2017 (13:49 IST)

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி உயிருடன் மீட்பு

ஒடிசா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 3 வயது சிறுமியை பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புப்படையினர் உயிருடன் மீட்டனர்.
ஒடிசா மாநிலம் அங்கூல் மாவட்டத்தில் குலாசர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் சாகு. இவரது மகள் ராதா சாகு. ராதா சாகு விளையாடிக் கொண்டிருக்கும் போது வீட்டின் அருகேயுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆழ்துளை கிணற்றின் அருகே 16 அடி குழியைத் தோண்டி, அதன்வழியாக சென்று குழந்தையை உயிரோடு மீட்டார். 

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீயணைப்புத் துறையினரின் இச்செயலுக்கு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் பாராட்டு தெரிவித்துள்ளார்.