1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
  4. Vaastu tips for removing the obstacles in building a new house...!!

புதிய வீடு கட்டுவதில் ஏற்படும் தடைகளை நீக்கும் வாஸ்து குறிப்புகள்....!!

புதிய வீடு
புதியதாக வீடு கட்டும்போது ஏதாவது சில காரணங்களால் சிலருக்கு தடைபட்டு நிற்கும். வீடு கட்ட இருக்கும் இடம் முன்பு ஒரு வேலை இடுகாடாகவோ, நரபலி கொடுத்த இடமாகவோ, புற்றுகள் இருந்து அகற்றப்பட்டோ அல்லது பில்லி, சூனியம், பேய் பிசாசுகள் கண்  திருஷ்டிகளினால் தடை ஏற்படலாம்.
இவ்வாறு தடை ஏற்படாமல் இருக்க வீடு கட்ட வாங்கிய கட்டுமான கற்களின் சிறிய ஜல்லிகல் ஒன்றை எடுத்து கொண்டு ஐயப்பன் கோவிலுக்கு சென்று நம்பூதிரிகளிடம் கொடுத்தால் சுவாமி ஐயப்பன் பாதத்தில் வைத்து ரிக் வேதத்தின் சுருகத்தை ஓதி பூஜை செய்து  கொடுப்பார்கள்.
 
அந்த ஜல்லிகல்லை அஸ்திவாரத்தின் ஈசானிய மூலையில் போட்டு மூடி கட்டிடம் கட்டினால் எவ்வித பிரச்சனைகளும் இன்றி தீய சக்திகளின் தாக்குதல் இன்றி வீடு கட்டும் பணி இனிதே நிறைவேறும்.
 
புதிதாக வீடு கட்டுபவர்கள் அனைவரும் வாஸ்து நாளில் பூமி பூஜை போட்டு வீடு கட்டத் தொடங்கினால், வேலைகள் வெகு சீக்கிரம் முடியும். மிகச்சரியான வாஸ்து உள்ள வீட்டில் பிரச்சனைகள் இருக்காது. நிம்மதி மகிழ்ச்சி பெருகும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
வெண்கடுகை சாம்பிராணி புகை போடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன...?