1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified வியாழன், 1 செப்டம்பர் 2022 (12:22 IST)

எண்ணற்ற பலன்களை தரும் ரிஷி பஞ்சமி வழிபாடு !!

Rishi Panchami
சூரியன் இல்லையேல் இவ்வுலகம் இல்லை. பிரபஞ்சமே சூரியனின் கொடையால்தான் இயங்குகிறது. மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மைகளையும் சூரியனே வழங்குகிறார். அதனால்தான் காலை நீராடிய உடனே சூரியனை வழிபடுகின்றோம். நம்முடைய நன்மைக்காக நாம் சூரியபகவானை வழிபடுகிறோம்.


நமக்கெல்லாம் நன்மை தருவதற்காக சூரியபகவான் தினமும் யாரை வழிபடுகிறார் என்றால், வான மண்டலத்தில் இருக்கும் சப்த ரிஷிகளைத்தான் சூரியபகவான் வழிபடுகிறார். விண்ணில் ஏழு ரிஷிகளும் சப்தரிஷி மண்டலமாக நட்சத்திர வடிவத்தில் காட்சி தருகின்றனர்.

காஸ்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், கௌதமர், பிருகு, வசிஷ்டர் ஆகிய இந்த எழுவர்தான் சப்தரிஷிகள். 'ரிஷி'கள் என்பவர்கள், 'மந்திர த்ரஷ்டா' அதாவது, நாம்  ஜபிக்கும் மந்திரங்களை பிரத்யக்ஷமாகக் கண்டுணர்ந்து நமக்குக் கொடுத்தவர்கள். அவர்களது மகிமை அளவிடற்கரியது.

நாம் நல்வாழ்வு காண உதவும் மந்திரங்கள், ரிஷிகள் நமக்கு அளித்த அருட்கொடை. அவர்கள் தம் தபோவலிமையால் நமக்கு அளித்த மந்திரங்களின் சக்தியால், வாழ்வில் ஏற்படும் இன்னல்களை நாம் வெற்றி கொள்ளலாம். விச்வாமித்ர மஹரிஷி நமக்கு அளித்த 'காயத்ரி  மந்திரம்' ஒன்றே மந்திரங்களின் சக்தியை விளக்கப் போதுமானது.