Daily Horoscope
✕

வாஸ்துப்படி அறைகளை எந்தெந்த திசையில் அமைப்பது நல்லது...?

Updated: புதன், 20 பிப்ரவரி 2019 (17:14 IST)
 
கோவில் அல்லது பீடம்தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வடகிழக்கு திசையில் அமைத்திடுங்கள்; அனைத்து நன்மைகளும் வந்து சேரும். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்கவேண்டும்.
 
சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனால் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு  திசையில் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசை யில் இது  இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.
 
படுக்கை அறையை தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். மேலும் தூங்கும் போது தலை, தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக வடகிழக்கு திசையில் தூங்கக் கூடாது.
 
குளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதால், இந்த அறை மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண் டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில்  பிரச்சனைகள் இருக்கும்.
 
வீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது!!! அது திறந்த வெளியாகவும், குப்பையாகவும் இருக்கக்கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24  மணி நேரமும் எரிய விடுவது நல்லது.

எல்லாம் காட்டு

பிறக்காத குழந்தைகளின் உணவை நாம் உண்கிறோம். சத்குரு பேச்சு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்!.. கட்டண விரைவு தரிசனம் ரத்து!..

புரட்டாசி பிரதோஷம், மகாளய அமாவாசை: சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி!

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O..

புதிய சாதனையை படைத்த பத்ரிநாத்!.. 17.79 லட்சம் பக்தர்கள் வருகை!...

அடுத்த கட்டுரையில்
Show comments