1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

செல்வம் பெருக கடைபிடிக்க வேண்டிய வாஸ்து முறைகள் என்ன...?

உறங்கும் போது, தலையை தெற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். வடா அல்லது கபா தோஷங்கள் இருந்தால், இடது பக்கம் திரும்பியும், பிடா தோஷம் இருந்தால், வலது பக்கம் நோக்கி தூங்க வேண்டும்.

வீட்டின் நடுவே படிக்கட்டுகள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது முக்கிய உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே வீட்டின் ஓரமாக படிக்கட்டை  அமைக்கலாம்.
 
வீட்டின் மத்திய பகுதி காலியாக இருக்க வேண்டும் அல்லது எந்த ஒரு கனமான மரச்சாமான்களை வைத்திருக்கக் கூடாது. தலைக்கு மேல் உள்ள உத்தரங்கள் வீட்டின் மைய பகுதி வழியாக செல்ல கூடாது. ஏனெனில் அவை குழப்பமான மனநிலையை ஏற்படுத்தும்.
 
வீட்டின் தென் கிழக்கு பகுதியில் பூமிக்கு அடியில் தண்ணீர் தொட்டி இருக்கக் கூடாது. ஏனெனில் அது உடல்நல பிரச்சனைகள் அதிகம் ஏற்படுத்தும். வீட்டின் அக்னி  மூலையில், அதாவது வீட்டின் தென் கிழக்கு மூலையில் தினமும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது மிகவும் நல்லது.
 
வீட்டை சுற்றியுள்ள சுவரும் அதன் கதவும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். கதவின் இரு பக்கங்களிலும் சிட்ரஸ் பழங்கள் அல்லது செடிகளை வளர்க்கலாம். உங்கள் வீட்டில் யாரேனுக்கும் உடல்நலம் சரியில்லை என்றால், அவரின் அறையில் சில வாரங்களுக்கு மெழுகுவர்த்தியை எரிய வைப்பது நல்ல ஆரோக்கியத்தை  கொடுக்கும்.
 
வீட்டின் தென் திசையை நோக்கி ஆஞ்சநேயர் படத்தை வைத்திருப்பது, வீட்டில் உள்ளவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் வீட்டின் செல்வ நிலை அதிகரிக்கும்.