1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. If you keep peacock feathers at home, will the Vastu Dosham be Removed...?

மயிலிறகை வீட்டில் வைத்தால் தோஷங்கள் நீங்குமா...?

மயில் இறகு
பல்வேறு சிறப்புக்கள் கொண்ட மயிலிறகுகள் வீட்டில் வைத்தால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. வீட்டில் எட்டு எண்ணிக்கையில் மயில் இறகை வைத்தால் வாஸ்து குறைபாடுகள் நீக்கும் என்பது நம்பிக்கை.  

இதனை எங்கு வைக்கலாம், எப்படி இதனை வைக்கலாம் என்பதை பார்க்கலாம். வீட்டின் பூஜை அறையில், ஹால் ரூமில் வைக்கலாம். பூஜை அறையில் எட்டு  இறகு சேர்த்து ஒரு வெள்ளை துணியால் அல்லது வெள்ளை நூலில் கட்டி "ஓம் சோமாய நமஹே" என்ற மந்திரத்தை ஜபிக்கலாம்.
 
வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பது போன்று தோன்றினால் வாசற்படியில் இதனை வைக்கலாம். குறிப்பாக இதனை வைப்பதன் மூலம் பூச்சிகள் வீட்டில் தங்காது.  இந்த இறகை பார்த்தால் அதற்கு ஏதோ பார்த்து கொண்டே இருப்பது போன்று தோன்றும் என்பதால் அந்த பக்கமே தலை வைத்து கூட இருக்காது என்றே கூறலாம்.  வீட்டின் அலமாரி, பணப் பெட்டி வைக்கும் இடத்தில் வைத்தால் செல்வ செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.
 
வீட்டில் இருக்கும் தோஷங்கள் மட்டுமில்லாமல் கிரஹத்தால் தோஷம் இருப்பவர்கள் கூட இதனை வீட்டில் வைத்து கொள்ளலாம். குறிப்பாக சனி தோஷம் உள்ளவர்கள் மூன்று மயில் இறகு சேர்த்து ஒரு கருப்பு துணி அல்லது நூலில் கட்டி வைத்து விடவேண்டும். பிறகு ஓம் சனீஸ்வர நமஹே என்ற மந்திரத்தை கூற  வேண்டும். இந்த மந்திரம் சனிக்கிழமை அன்று இருபத்தியொரு முறை கூறினால் சனி கிரக தோஷம் நிவர்த்தியாகும்.
 
தம்பதியர்கள் பிரச்சனைகள் அடிக்கடி வருவது, வீண் வாக்குவாதம் போன்றவற்றை தவிர்க்க மயில் இறகு பயன்படுத்தலாம். புதியதாக திருமணம் ஆன தம்பதியர்கள் படுக்கை அறையில் இதனை வைத்து கொண்டால் அந்நோன்யம் இருக்கும் என்பது நம்பிக்கை. மயிலிறகு வைப்பதால் பூச்சிகள், பல்லி  தொல்லைகளும் நீங்கிவிடும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (30-04-2021)!