வாஸ்துப்படி வீட்டின் அமைப்பு எவ்வாறு இருக்க கூடாது...?

வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள காலிமனை நிலங்களை வாங்கலாம். வீட்டின் தெற்கு, மேற்கு பகுதியில் உள்ள காலிமனை நிலங்களை இனாமாகக் கூட வாங்கி சேர்க்கக் கூடாது.
ஒரு வீட்டினை இருவருக்கு பங்கிட்டு பாகப்பிரிவினைச் செய்ய கூடாது. ஒரே மனையில் 2 வீடுகள் கட்ட விரும்பினால் முதலில் தெற்கு  அல்லது மேற்கு பகுதியில் கட்ட வேண்டும். பிறகு தான் வடக்கு அல்லது கிழக்கிலுள்ள காலி மனையில் வீடு கட்டலாம்.
 
ஓரே மனையில் 2 வீடுகள் கட்டினால் தெற்கிலுள்ள வீட்டை விட வடக்கில் உள்ள வீடு தாழ்வாகவும், மேற்கில் உள்ள வீட்டை விட கிழக்கில் உள்ள வீடு தாழ்வாகவும் இருக்க வேண்டும்.
 
ஒரு வீட்டு மனையின் எதிரே ஒரு தெரு முடிவதையே தெருக்குத்து அல்லது வீதி சூலம் எனலாம், வடக்கு ஈசானிய தெருக்குத்தும் கிழக்கு ஈசானிய தெருக்குத்தும் வீட்டிற்கு நன்மை தருவனவாம்.
 
தெற்கு அக்னி மூலைத் தெருகுத்து வியாபாரத்திற்கு ஏற்றது. மேற்கு வாயு மூலைத்தெருக்குத்து சட்ட நுணுக்கங்களுக்கு ஏற்றது. வடக்கு வாயு  மூலை தெருக்குத்து பிரச்சினைகள் தரும். கிழக்கு அக்னி மூலை தெருக்குத்து பிரச்சசனைகள் தரும். மேற்கு நைருதி மூலை தெருக்குத்தும்  பிரச்சனைகள் தரும்.
 
ஒரு மனைக்கு வடக்கிலும் கிழக்கிலும் பாதை இருந்தாலும், 4 திசைகளிலும் பாதை இருந்தாலும் சிறப்புடையது.
 
வீடு கட்ட ஆரம்பிக்கும் முன் அல்லது செப்பனிட ஆரம்பிக்கும் முன் சரியான நேரத்தில் அருகம்புல், துளசி கொண்டு மனையின்  ஈசானியத்தில் வாஸ்து பூஜை (பூமி பூஜை) செய்தல் மிக நல்லது.
 
வீட்டை செப்பனிடும் முன் வாஸ்து நிபுணர்களைக் கொண்டு தீர நிதானமாக ஆராய்ந்த பின் பழுது பார்க்கும் பணியை வேகமாகவும்  கவனமாகவும் செய்ய முடிக்க வேண்டும்.
 
வீடு பழுது பார்க்கும் பணிகளை மெதுவாகச் செய்தாலும் பரவாயில்லை. பாதியில் நிறுத்தவேக் கூடாது. முறையான கணக்குகளுடன்  செய்யப்பட்ட பிரமிடுகளை வீட்டில் உபயோகப்படுத்தி மூப்பினை அகற்றலாம். மேலும், மனஉலைச்சல், பல்வேறு பிரச்சனைகளை நீக்கி  நிம்மதியாக நம்மை வாழவும் வைக்கின்றது.
 
வீட்டில் தினந்தோறும் சூரியோதம் சூரியன் மறைவு நேரத்தில் செய்யப்படும். அக்னி ஹோத்திரம் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வு அமையவும் உதவும். வீட்டில் நாமே செய்யும் யாகமே அக்னி ஹோத்திரம்.
 
வீட்டில் தலைவாசல் அமைக்கும் போது கட்டிடத்தின் முன்பக்கத்தினை அளந்து அதை 9 சம பாகங்களாக்கி 4, 5, 6வது பாகங்களில் தகுதியான  இடத்தில் தலைவாசல் அமைக்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :