திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By
Last Modified: திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (18:45 IST)

வாஸ்து முறைப்படி தியானம் செய்ய சிறந்த இடம்...

தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலைப்படுத்தும் நிலையே தியானமாகும்.

 
அமைதி, அன்பு, மகிழ்ச்சி ஆகிய இயற்கை வளத்தை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம். மேலும், தெளிவான சிந்தனையுடன் சரியான முடிவை எடுக்கத் தேவை மனோதிடம். 
 
இந்த மனோதிடத்தைப் பெறுவதற்கு மிகச்சிறந்த வழிகளில் முக்கியமானது தியானம் என்றால் மிகையில்லை. இவ்வாறு தியானம் செய்வதற்க்கு அமைதியான சூழல், சுத்தமான காற்று என்பன முக்கியம். 
 
அதேபோல் தியானம் செய்ய வாஸ்து படி சிறந்த இடம் ஒரு இடத்தின் வடகிழக்கு மூலை ஆகும். அந்த வடகிழக்கு அறையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் ஜன்னல் இருப்பது மிகவும் நல்லது.