திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
Written By Sasikala

குக்கர் பராமரிப்பு பற்றி தெரிந்து கொள்வோம்....

பிரஷர் குக்கர் இல்லாத சமையல் அறையே இன்று இல்லாத நிலையில், அதன் பராமரிப்பு பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். எரிபொருளும் சிக்கனமாகிறது,சமையல் எளிதாக முடியும் என்பதால் கிராமங்களிலும் குக்கர்தான் உபயோகிக்கின்றனர். குக்கரை சரியாக பராமரித்தால் அதன் ஆயுள் நீடிக்கும்.

 
சமைத்து முடித்த உடன் குக்கரின் கேஸ்கட், விசில் போன்றவைகளை தனித்தனியாக கழுவி துடைக்க வேண்டும். ப்ரஸ் கொண்டு விசில் உள்ள உணவு துணுக்குகளை நன்றாக கழுவவேண்டும்.
 
சிலர் குக்கர் மூடியைத் திறந்தபின்பு கேஸ்கெட்டை எடுக்காமல் அப்படியே வைத்துவிடுவார்கள். சிலர் கேஸ்கெட்டை இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒரு முறைதான் சுத்தம் செய்வார்கள். இது மிகவும் தவறு. சூட்டோடு அப்படியே போடுவதால் ரப்பர் அப்படியே இறுகிப்போய்விடும். இதனால் கேஸ்கெட் அதிக நாள் உழைக்காது. சமையல் முடிந்தவுடனேயே குக்கரின் மூடியைத் திறந்து ரப்பர் கேஸ்கட்டைக் கழற்றி அதை நன்கு சுத்தமாகக் கழுவி நன்கு இழுத்துவிட்டுப் பின்பு உரிய இடத்தில் மாட்டவேண்டும். இப்படிச் செய்தால் ரப்பர் கேஸ்கெட் அதன் ஒரிஜினல் சைஸில் இருக்கும். நீண்ட நாள் உழைக்கும்.
 
தற்போது காப்பர் பாட்டம், நான் ஸ்டிக் சாண்ட்விட்ச் போன்ற வகைகளைப் பயன்படுத்துகிறார்கள். கேஸ் அடுப்பில் தீயை அதிகமாக வைத்து இவற்றைப் பயன்படுத்தக் கூடாது. தண்ணீர் அதிகம் இல்லாமல், தீயும் அதிகமாக இருந்தால் பாத்திரம் சீக்கிரம் கெட்டுவிடும். இவ்வகைப் பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது அடுப்பில் தீயை ரொம்பவும் குறைத்து "சிம்'மில் வைத்தாலே போதும்.
 
குக்கரின் மூடி சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். லூசாக இருந்தால் உடனே மாற்றவேண்டும். அடிக்கடி எண்ணெய் ஊற்றி பராமரித்தால் நீண்ட நாட்களுக்கு வரும்.