1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
  4. Varalaxmi who became a blind woman in JK Direction

ஜே.கே இயக்கத்தில் பார்வையற்ற பெண்ணாக மாறிய வரலட்சுமி

நடிகை வரலட்சுமி
ஜே.கே இயக்கும் திரைப்படத்தில் வரலட்சுமி பார்வையற்ற பெண்ணாக நடிப்பதாக ட்வீட் செய்துள்ளார்.
தமிழில் சிம்புவுடன் போடா போடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து  நடித்து வருகிறார். கடினமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தனது அடுத்த படத்தில் பார்வையற்ற  பெண்ணாக நடிக்கப் போவதாக ட்வீட் செய்துள்ளார்.
 
ஜே.கே இயக்கும் இந்த படத்தை சாய் சமரத் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாம் சி.எஸ் இசையமைக்கிறார். வரலட்சுமி நடிப்பில் சண்டக்கோழி-2 ரிலீசுக்கு  தயாராக உள்ளது. விஜய்யின் சர்க்கார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வரலட்சுமி, முற்றிலும் மாறுபட்ட வெல்வெட் நகரம் படத்தில் கதாநாயகியாக  நடித்து வருகிறார். இப்படி பல படங்களில் வரலட்சுமி பிஸியாக நடித்து வருகிறார்.
 
ட்விட்டர் பதிவில் முதல் முறையாக பார்வையற்ற பெண்ணாக நடிப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தாலும், மிகவும் ஆவலுடன் இருப்பதாக வரலட்சுமி  தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
நீதிமன்றத்தில் ஆஜராகாத எஸ்.வி.சேகர் - கடுப்பான நீதிபதி