திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : சனி, 31 மார்ச் 2018 (20:02 IST)

நவநீதகிருஷ்ணன் தற்கொலைக்கு தூக்கு கயிறு தர தயார்: தினகரன் ஆதரவாளர்

காவிரி மேலாண்மை வாரியத்தை சுப்ரீம் கோர்ட் விதித்த கெடுவுக்குள் மத்திய அரசு அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்துவிட்டதாக அனைத்து அரசியல் தலைவர்களும் ஒட்டுமொத்தமாக மத்திய அரசை குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் அரசியல் கட்சிகள் மத்திய அரசை கண்டித்து பல்வேறு வகையான போராட்டங்களை அறிவித்துள்ளன.


இந்த நிலையில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் ஒரு படிமேலே போய் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று பாராளுமன்றத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த்தபோது, ''காவிரி மேலாண்மை அமைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் கூறினார்.

ஆனால் அவர் தற்கொலை செய்யவில்லை. சொல்லியதை செய்ய தவறியதால் அவர் தற்கொலை செய்ய நான் தூக்குக்கயிறு மற்றும் விஷத்தை தருகிறேன்' எனக் கிண்டலாக கூறினார். புகழேந்தியின் பேச்சு அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.