1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: சனி, 22 டிசம்பர் 2018 (22:24 IST)

நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க தனித்து போட்டி: தினகரன் அறிவிப்பு

வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஒருபக்கம் அதிமுக-பாஜக கூட்டணியும் இன்னொரு பக்கம் திமுக-காங்கிரஸ் கூட்டணியும் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

மற்ற கட்சிகள் மூன்றாவது அணியோ அல்லது இரு அணிகளில் ஏதாவது ஒரு அணியில் இணைந்தோ போட்டியிட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கன்னியாகுமரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.

மேலும் பிரதமரை தேர்வு செய்யும் சக்தியாக அமமுகவை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றும், 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழக நலனுக்காக எப்படி தனித்து போட்டியிட்டார்களோ அதே வழியில் அமமுக போட்டியிடும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.