Daily Horoscope
✕

வடசென்னை ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு!

Updated: புதன், 20 ஜூன் 2018 (17:18 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘வடசென்னை’ படம் குறித்த முக்கிய அறிவிப்பை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன.
 
வடசென்னையை மையப்படுத்திய இந்தக் கதையில் சமுத்திரக்கனி, அமீர், ‘ஆடுகளம்’ கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ்  ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
 
இந்தப் படம் குறித்த முக்கிய அறிவிப்பை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், வடசென்னை படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் டிரெய்லர் வரும் ஜூலை 28ம் தேதி வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

1,634 கோயில்களில் 2,372 குளங்களை சீரமைக்க அரசு திட்டம்.. மீண்டும் தெப்பத்திருவிழாக்கள் நடக்குமா?

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திடீர் விலகல்.. 1,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்ததால் பரபரப்பு...

15 நாட் களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையேல் சம்பளம் பிடித்தம்.. கல்வி அதிகாரிகளுக்கு செக்...

அதிருப்தியில் தவெக எம்.எல்.ஏக்கள்.. ஹோட்டலிலேயே தங்க வைக்க தவெக முடிவு?..

ஈரானுக்கு எதிரான ஆபரேஷன் அயன் கோட்!.. டிரம்புக்கு வளைகுடா நாடுகள் ஆதரவு...

அடுத்த கட்டுரையில்
Show comments