வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: புதன், 6 மார்ச் 2019 (23:03 IST)

அழகிரி மகளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: பரபரப்பு தகவல்

முறையாக வருமான வரி கணக்கு செலுத்தாத வழக்கு ஒன்றில் முன்னாள் திமுக அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் அஞ்சுக செல்விக்கு எதிராக ஜாமினில் வெளி வர முடியாத பிடிவாரண்ட்டை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேத்தி மற்றும் மு.க.அழகிரியின் மகளுமான அஞ்சுகச் செல்வி அழகிரி தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக சுமார் ரூ.50 லட்சம் வரை முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என அவருக்கு எதிராக வருமான வரி துறை வழக்குப்பதிவு செய்தது. 
 
இந்த வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி மலர்மதி விசாரணை செய்தார். இன்றும் அஞ்சுகச் செல்வி ஆஜராகாததையடுத்து, அவருக்கு எதிராக ஜாமினில் வெளி வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி மலர் மதி உத்தரவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது