வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By கே.என்.வடிவேல்

திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்

திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்

திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக, லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
 

 
தமிழக சட்டம ன்ற தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த தேர்தலில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள்  கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
 
இதில், தமிழக சட்டமன்ற தேர்தலில் 112 முதல் 124 தொகுதிகளில் திமுக கூட்டணிக் வெற்றி பெறும் என்றும், அதிமுக அணிக்கு 67 முதல் 90 இடங்கள் கடைக்கும் என்றும், மக்கள் நலக் கூட்டணிக்கு 5 முதல் 11 தொகுதிகள் கிடைக்கும் என்றும், பாமகவிற்கு 3 முதல் 7 தொகுதிகள் வரையும், பாஜக கூட்டணி 1 அல்லது 2 தொகுதிகளில் வெற்றி பெற உள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கருத்துக் கணிப்பில், திமுக ஆட்சிக்கு 37 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே போன்று அதிமுக  ஆட்சிக்கு 32 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.