அதிமுக எம்எல்ஏ மகனின் பரபரப்பு வீடியோ: அதிமுக ஆட்சிக்கு வராது...
2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்றும் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசனின் மகன் சிவராம் பேசியுள்ள வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
நாகர்கோவில் சட்டமன்றத்தின் அதிமுக உறுப்பினர் நாஞ்சில் முருகேசன். இவரது மகன் சிவராம். இவர், தனது நண்பர்களுடன் மது அருந்தியபோது, பேசிய வீடியோ காட்சி வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
அதில், தனது தந்தை சொந்தப் பணத்தை செலவு செய்தே எம்எல்ஏ ஆனார் என்றும், வரவுள்ள தேர்தலில் ஜெயலலிதா ஆட்சிக்க வரமாட்டார் என்றும் அவர் பேசியுள்ளார்.
தற்போது, அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் நாகர்கோவில் நாகர்கோயில் தொகுதி வேட்பாளராக நாஞ்சில் முருகேசன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.