மே முதல் வாரத்தில் வெளியாகிறதா அதிமுக தேர்தல் அறிக்கை?
சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை அடுத்த மாதம் மே முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தல் மே 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுகவை தவிர அனைத்துக் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விட்டனர்.
பெரும்பாலான கட்சிகள் தங்கள் அறிக்கையில் மதுவிலக்கு, விவசாயக்கடன் மற்றும் கல்விக்கடன் தள்ளுபடி ஆகியவை இடம் பெறச் செய்துள்ளனர்.
ஆனால், அதிமுக அரசு தனது தேர்தல் அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. அதில் என்னென்ன திட்டங்கள் மற்றும் இலவச திட்டங்கள் இடம் பெறப்போகிறது என்று பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில், அடுத்த மாதம் 3ஆம் தேதி அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனேகமாக, மக்களை கவரும் வகையில் பல இலவச திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் வாக்குறுதிகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது. இதனால், அதிமுகவின் தேர்தல் அறிக்கை மீது எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.
அம்மா உணவகம், குடிநீர், உப்பு, சிமெண்ட் போல் சில புதிய திட்டங்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.