வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (13:19 IST)

பிக்பாஸில் இருந்து இன்று வெளியேறுகிறார் ஜூலி?

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி வெளியேற்றப்படுவார் எனத் தெரிகிறது.


 

 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகிறது. தன்னுடைய காதலை ஆரவ் ஏற்காததால், மனமுடைந்த ஓவியா மன அழுத்தம் காரணமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டார்.
 
வெளியேற்றப்படும் நபர்களில் வையாபுரி, ஓவியா, ஜூலி ஆகிய மூவரும் இருந்தனர். ஆனால், போன வாரம் வெளியேற்றம் எதுவும் நடைபெறவில்லை. அந்நிலையில்தான் ஓவியா வெளியேறி விட்டார். வெளியேற்றப்படும் நபர்களில் மீதமிருப்பது வையாபுரி மற்றும் ஜூலி ஆகிய இருவரும்தான். சமீபகாலமாக வையாபுரிக்கு பலர் வாக்களித்து வருவதாக தெரிகிறது. மேலும், அவர் மீது பெரிதாக யாருக்கும் பெரிய அதிருப்தி இருப்பதாக தெரியவில்லை.
 
ஆனால், ஜூலிக்கு பெரிதாக யாரும் வாக்களிக்காததால், அவரை இன்று கமல்ஹாசன் வெளியேற்றிவிடுவார் எனக் கூறப்படுகிறது.

எதுவாக இருந்தாலும், கமல்ஹாசன் அறிவித்த பின்பே அது தெரியவரும்.