1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By

கன்னி: தை மாத ராசி பலன்கள் 2020

(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) - கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய் - சுக  ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  - பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன், புதன் -  ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ - அயன, சயன, போக  ஸ்தானத்தில் சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
 
28-01-2020 அன்று மாலை 3.12 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
04-02-2020 அன்று மாலை 6.36 மணிக்கு சுக்கிர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு  செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
உங்களை எதிர்த்து நிற்பவருக்கும் அன்பைத் தரும் திறன் கொண்ட கன்னி ராசியினரே,  இந்த மாதம் உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும் பயணங்களும் அவற்றால் நன்மைகளும்  உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள். பொருள் வரவு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும். 
 
குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள்  உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனதில் நிம்மதி உண்டாகும். உடல்நலத்தைப் பொறுத்த வரை  சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டாலும், வெகு விரைவில் குணமாகும் சூழல் உள்ளது. 
 
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக பெரிய ஆர்டர் ஒன்று  கிடைக்கப் பெறுவீர்கள். 
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணாமல்  இருப்பதற்கு கவனமாக இருப்பது நல்லது. 
 
கலைத்துறையினர் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம் பெருகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும்.
 
அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எந்த முயற்சியையும் முழு முயற்சியுடன் செய்வதன் மூலம் வெற்றி  காண்பீர்கள். நட்பு வட்டம் பெருகும். உதவி என்று வருபவர்களுக்கு  தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். 
 
பெண்களுக்கு நல்ல சிந்தனை ஏற்படும். மனோ பலம் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும்.
 
உத்திரம் 2, 3, 4 பாதம்:
 
இந்த மாதம் எதிர்ப்புகள் விலகி உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக உழைப்பின் மூலம்  லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு  வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும். மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். 
 
அஸ்தம்:
 
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும். சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். தொலைபேசித் தொடர்பு  மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது.  சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.
 
சித்திரை 1, 2, பாதம்:
 
இந்த மாதம் எதிர்ப்புகள் நீங்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.  மாணவர்கள் கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும்,  வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள்  விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். 
 
பரிகாரம்: ஸ்ரீசாஸ்தாவை வணங்கி வர சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும்.
அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய் - சனி
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 1, 2
அதிர்ஷ்ட தினங்கள்: ஜனவரி 25, 26.