வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : வியாழன், 16 டிசம்பர் 2021 (13:23 IST)

ரிஷபம் - மார்கழி மாத பலன்கள் 2021

(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) - கிரக நிலை: ராசியில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக், சனி - தொழில் ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
மனதில் கவலைகளை புதைத்துக் கொண்டு உதட்டில் சிரிப்பை வரவழைத்து கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண் வாக்குவாதங்கள் அகலும். மனதில் உற்சாகம் ஏற்படும்.. நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது.
 
குடும்பத்தைப் பொறுத்தவரை காரியம் சாதிக்க பலவகையான யோசனைகளையும் தந்திரங்களையும் கையாள்வதில் கெட்டிக்காரர்களான முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீண் பகை ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது.
 
தொழிலதிபர்கள் கடந்த காலங்களில் மனதில் இருந்த சஞ்சலங்கள் மாறி நம்பிக்கை ஒளி பிறக்கும். புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்று சிறந்த முன்னேற்றம் காண்பர். பால்பண்ணை அதிபர்கள் தகுந்த முன்னேற்றம் பெறுவார்கள். 
 
உத்தியோகஸ்தர்கள் துறை சார்ந்த பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். இதனால் நற்பெயர் பெறுவதுடன் ஊழியர்களின் எதிர்பாராத உதவிகளும் உங்கள் மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும். 
 
பெண்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் சிறிது மந்த நிலை காண்பார்கள். அரசிடம் கேட்டிருந்த கடனுதவிகள் மற்றும் வரவேண்டிய நிலுவைத்தொகைகள் எளிதாகக் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் இடைஞ்சல் செய்யும் நோக்குடன் சிலர் செயல்படுவார்கள். 
 
கலைத்துறையை சார்ந்தவர்கள் தங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும்போது தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுக்கவும். 
 
அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கில் சிறிது சரிவு ஏற்படலாம். அதே வேளையில் பதவியும், பொறுப்பும் வந்து சேரும். பணம் வந்த வழி தெரியாமல் செலவழியும். வீண் அலைச்சலும், வாக்குவாதமும் அவ்வப்போது வாட்டி வதைக்கும். 
 
மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் படித்து நல்ல தேர்ச்சியும் புகழும் பெறுவார்கள். ஓவியப் பயிற்சிபெறும் மாணவர்கள் தங்கள் திறமையை நன்கு வெறிபடுத்தி பெயரும் புகழும் பெறுவார்கள். படிப்புக்கு தேவையான பெருளாதார வசதிகள் தாராளமாக கிடைக்கும். 
 
கார்த்திகை 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். அரசியல்வாதிகளுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள்.
 
ரோகிணி:
இந்த மாதம் பணவரத்து திருப்தியாக இருக்கும். வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். 
 
மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும்படியான சூழ்நிலை இருக்கும். 
 
பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி.