1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (11:10 IST)

மார்கழி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை ஏன்...?

மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.

சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும்.  விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.  திருப்பாவை என்றாலே நம் நினைவிற்கு வருவது ஆண்டாள் தான். ஆண்டாள் கிருஷ்ணரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார். திருப்பாவை ஆண்டாளின் வழிபாட்டை வெளிப்படுத்தும் ஒரு படைப்பாகும்.
 
தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி  வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி தேவர்களுக்கு இரவுக் காலம் முடிகிற வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன. மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு  முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும்.
 
மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஓசோன் படலத்தில் இருந்து வரும் சுத்தமான காற்று வேறு எந்த மாதத்திலும் கிடைக்காது. அதனால் மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் எழுந்து குளித்து, சுத்தமான காற்றை சுவாசிக்கும் பொழுது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் முழுமையாக கிடைத்து ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் பெருகி, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
 
மார்கழி மாதத்தில் செய்யும் தானங்கள் உங்களுக்கு பெரிய பாக்கியத்தை கொண்டு சேர்க்கும். மார்கழி மாதம் என்றாலே அதிக குளிரை உடையதாக இருக்கும். குளிரை தாங்க முடியாமல் அவதிப்படுவார்களுக்கு, கம்பளி போர்வையை தானமாக வழங்கலாம். இந்த தானம் செய்வதன் மூலம் நிறைய புண்ணியங்கள் உங்களை தேடி வந்தடையும்.