திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : புதன், 16 டிசம்பர் 2020 (15:04 IST)

விருச்சிகம்: மார்கழி மாத ராசி பலன்கள்

(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) - கிரகநிலை: ராசியில் கேது, சுக்ரன்   - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சனி,சூர்யன், புதன், சந்திரன் - தைரிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் ராஹு என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
 
26-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
06-01-21 அன்று காலை 07.18 மணிக்கு சுக்கிர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
இந்த மாதம் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஆனாலும் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயருக்கும், புகழுக்கும் பங்கம் வரலாம்.  
 
குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.  பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். 
 
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக  பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். போட்டிகள் குறையும். புதிய  ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு  வேலை கிடைக்கும். தேவையற்ற  வீண் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது  காரிய  வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். 
 
பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும். உடல்நலனைப் பொறுத்தமட்டில் காய்ச்சல் தலைவலி ஏற்படும். மருத்துவ செலவு  அதிகரிக்கும். கவனம் தேவை. 
 
மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.
 
கலைத்துறையினருக்கு சிறப்பான மாதமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். சமூக சேவையில் உள்ளோர்க்கு சமூக  அந்தஸ்து உயரும்.
அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது.  பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.  எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.
 
விசாகம்:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்ட மிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும்.  பகைவர்களால்  ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை.
 
அனுஷம்:
இந்த மாதம் மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எந்த  காரியத்தையும் செய்து முடிப்பதில்  தாமதம் ஏற்படும்.
 
கேட்டை:
இந்த மாதம் கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.
 
பரிகாரம்:  கந்தசஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:  ஞாயிறு, புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 29, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 22, 23.