1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூன் 2020 (13:26 IST)

கடகம்: ஆனி மாத ராசி பலன்கள்

(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) - கிரகநிலை: ரண, ருண ஸ்தானத்தில்  கேது, சனி (வ) -  களத்திர ஸ்தானத்தில்  குரு (வ)  - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் (வ) - அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ, புதன்(வ), சூர்யன்  என கிரகங்கள் வலம்  வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
 
15-06-2020  காலை 3.14 மணிக்கு சூர்ய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-06-2020 அன்று காலை 10.32 மணிக்கு செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
20-06-2020 அன்று காலை 9.39 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
04-07-2020 அன்று பகல் 11.22 மணிக்கு புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-07-2020 அன்று பகல் 11.13 மணிக்கு குரு பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பொறுமையின் சிகரமாக இருக்கும் கடக ராசியினரே இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான  உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும். மனதை கவலை கொள்ளச்  செய்த  பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம். 
 
குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்ப செலவுகள் அதிகரிக்கும். ஆயுதங்கள், நெருப்புகள் பயன்படுத்தும் போது கவனம் தேவை.  கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது  எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம்  வரவேண்டியவை தாமதப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
 
தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில்  வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம்  லாபம்  கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும்.
 
கலைத்துறையினர் வாக்கு சாதுர்யத்தால் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். 
 
அரசியல்வாதிகளுக்கு நன்மை தரும் காலமிது. குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் நீண்ட நாட்களாக  நடக்காமல் இருந்த காரியங்கள் நடந்து முடியும்.
 
பெண்களுக்கு மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது.
 
மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. புத்திகூர்மையுடன் செயல் படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும்.
 
புனர்பூசம்:
 
இந்த மாதம் மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய  வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். 
 
பூசம்:
 
இந்த மாதம் கடவுள் பக்தி  அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல்,  சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி  நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு  அனுப்பும் போது கவனம் தேவை. 
 
ஆயில்யம்:
 
இந்த மாதம் தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும்.
 
பரிகாரம்: திங்கள் கிழமையில் அம்மனுக்கு மல்லிகை மலரை அர்ப்பணித்து தீபம் ஏற்றி வணங்க மன கவலை தீரும். எதிர்ப்புகள் அகலும். எல்லாவற்றிலும் நன்மை  உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:  திங்கள் - புதன் 
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூலை 2, 3.