1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஜூலை 2018 (14:10 IST)

மீனம் ராசிக்கான ஆடி மாத ராசி பலன்கள்

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மீனம் ஓட்டம் என்பதற்கேற்ப வாழ்க்கையில் கடுமையான உழைப்பிற்கு எப்போதுமே தயங்காத முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக செயல்படும் மீன ராசி அன்பர்களே,




இந்த மாதம் எந்தத் துறையிலும் முத்திரையைப் புதிய வழியில் பதிப்பீர்கள். தெய்வ அனுகூலத்தால் கஷ்டங்களில் இருந்து விடுபட்டு முன்னேற்றம் வந்து சேரும். அதீத உழைப்பின் மூலம் வெற்றிகள் கிடைக்கும். வழக்கு, வியாஜ்ஜியங்கள் சாதகமாக இருக்கும். அதனால் சிலருக்கு கடன்கள் வரலாம். சொத்து விசயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.குடும்பத்தில் உறவினர்கள் முறையில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழும். உங்கள் முயற்சிகளில் வெற்றியையும். பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பதையும் காண்பீர்கள். கணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு, போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர். வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம். அறிவைப் பயன்படுத்தி புதிய வேலைகள் கிடைக்கப் பெறலாம். உத்தியோகம் சம்மந்தமாக வெளியூர்  செல்ல நேரலாம்.
தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சலும், கவனச் சிதற்லும் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய வியாபாரம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். இருப்பதை சிறப்பாக நடத்துவதற்கு முயற்சி செய்யவும்.

பெண்கள் பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். கணவர், மற்றும் அண்டை அயலாரின் அன்பும், பாசமும் கிடைக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் ஆகையால் கடினமான வேலைகளிலும் கூட உற்சாகமாக காணப்படுவீர்கள். எல்லோரிடமும் அன்பாக பழகி, சுறுசுறுப்பாக நடந்து அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்.  
கலைஞர்கள் கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்று பொருளாதார உயர்வும், புகழும், பாராட்டும் கிடைக்கப் பெறுவர். சிலருக்கு வேறு மொழிப்படங்களிலும், பிரகாசிக்கக் கூடிய கால கட்டம். உடல் நலம் சீராக இருக்கும். சிலருக்கு அலைச்சல் மிகுதியால் நேரத்திற்கு உணவு சாப்பிடமுடியாமல் வயிற்று உபாதைகள் ஏற்படலாம்.

அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளுக்கு முற்பகுதி நன்றாகவே இருக்கும். எதிர்பார்த்த பதவியை அடையலாம். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கப் பெற்று மன நிம்மதியை அடைவீர்கள். சிலருக்கு பித்தம், சூடு போன்ற உடல் உபாதகள் வந்து போகும். தக்க நேரத்தில் அதற்குள்ள மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.   மாணவர்கள் தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பர். நல்ல மதிப்பெண்கள் பெற்று சிறந்த பேரை எடுக்க முடியும். நண்பர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். தந்தை, தாயிடம் அன்பும், பாசமும் கிடைக்கப் பெறுவீர்கள். நல்லதே நடக்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் கோவிலுக்குச் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். முடிந்தால் எண்ணெய் வாங்கிக் கோவிலுக்கு கொடுக்கவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்