வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : வியாழன், 16 டிசம்பர் 2021 (14:44 IST)

துலாம் - மார்கழி மாத பலன்கள் 2021

(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்) - கிரக நிலை: அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் சுக், சனி - பஞ்சம ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
கூர்மையான வார்த்தைகளை பேசி விட்டு பின்பு வருத்தப் படும் துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பை அதிகரிக்க செய்யும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். ஆன்மீக யாத்திரைகள் சென்று வருவீர்கள்.
 
குடும்பத்தில் வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வ புண்ணிய சொத்துக்களால் வருமானம் கிடைக்கும். எதிரிகளால் இருந்த தொந்தரவுகளை சமாளிக்க கடந்த காலங்களில் பணம் விரையமானது. அந்நிலை அடியோடு அழிந்து விட்டது. கணவன் மனைவி மற்றும் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். 
 
தொழிலதிபர்கள் தங்க நகைகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்பவர்கள், ரத்தினகற்கள் விற்பனையாளர்கள் புதிய வாடிக்கையாளர்களை நிரம்ப பெற்று நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள். புதிதாக தொழில் வியாபாரம் ஆரம்பிக்கலாம். 
 
உத்தியோகஸ்தர்கள் அரசு ஊழியர்கள் பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகும் நிலைகள் உருவாகும். தனியார் ஊழியர்கள் தெய்வபலத்தை நம்புங்கள். பொருளாதாரம் சரளமாக கிடைக்கும். இருக்கும் புகழை தக்க வைக்க நேரம் சரியாக இருக்கும். 
 
பெண்கள் சக ஊழியர்களின் மறைமுக நெருக்கடிக்கு உள்ளாவார்கள். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு குறைவாக இருக்கும். தைரியமான குணங்களுடன் பணி செய்வதால் மட்டுமே இருக்கும் வேலையில் இடர்களை எதிர்கொள்ள முடியும். 
 
கலைத்துறையினருக்கு டெக்னிக்கல் துறையில் சார்ந்தவர்கள் மேன்மை அடைவர். பிற நாடுகளுக்கு சென்று பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது. புகழ் பாராட்டு கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம். காத்திருந்து கடமைகளை சரியாக செய்பவர்களுக்கு வெற்றிக்கனி கிடைக்கும். 
 
அரசியல்வாதிகள் உங்களின் நற்செயல்களின் வெளிப்பாடுகளால் உயர்வைப்பெற்று புகழ் பெறுவீர்கள். அரசியலுடன் இணைந்த வகையில் தங்களது தொழில் வாய்ப்பை பயன்படுத்துபவர்கள் அரசு சார்ந்த அதிகாரிகளிடம் தகுந்த அனுசரணையுடன் நடந்து ஏற்றம் பெறுவீர்கள். 
 
மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள். சக மாணவர்களின் பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு உதவுவீர்கள். 
 
சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. 
 
சுவாதி:
இந்த மாதம் எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள். மனோ பலம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். 
 
விசாகம் 1, 2, 3ம் பாதம்:
இந்த மாதம் பிரயாணத்தில் தடங்கல் ஏற்பட்டு. திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். வாகன லாபம் ஏற்படும். எதிர் பார்த்த பணம் வந்து சேரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி கொடுப்பீர்கள். 
 
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் குல தெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள். 
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி.