திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (14:24 IST)

கன்னி - மார்கழி மாத பலன்கள் 2021

(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) - கிரக நிலை: பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆசைப்படும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். காரியங்களில் இருந்து வந்த தாமதம் அகலும். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்.
 
குடும்பத்தில் நீங்கள் செய்கிற எல்லா செயல்களும் ஒன்றுக்கு பத்தாக லாபத்தை தரும். சாதனைகள் பல நிகழ்த்தி புகழ் பெறும் யோகம் உண்டாகும். வாழ்க்கைத்துணை வகையில் தகுந்த ஒத்துழைப்பும் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வு தருவதாக அமையும். வீடு மனை வாகனம் தொடர்பான இனங்களில் அனுகூலமான நிகழ்வுகள் நடக்கும். 
 
வியாபாரிகள் பொருட்களை குத்தகை முறையில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். மின்சாரம் கட்டுமான பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் வளம் பெறுவார்கள். தொழிலில் ஏற்பட்ட நிலுவை கடன்கள் அடைவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். தொழிலுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.
 
உத்தியோகஸ்தர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ளவர்களு பல்வேறு விரயமான செலவுகள் வரலாம். அனைவரையும் அரவணைத்து வேலை வாங்கும் புதிய சிந்தனைகள் உருவாகும். எதிரிகள் கெடுதல் முயற்சிகளை செய்வதால் சிறு சிறு இறக்கங்கள் உருவாகும். 
 
பெண்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் தங்கள் கை சேமிப்பை குடும்பச் சுபசெலவுகளுக்காக பயன்படுத்தும் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தெய்வ காரியங்களில் பங்கெடுக்கும் மார்க்கங்கள் நிரம்பவே உண்டு. 
 
கலைத்துறையினர் தனக்குள்ள திறமையை நன்கு வளர்த்துக்கொண்டு புதிய வாய்ப்புகளையும் நிறைந்த பொருளாதாரத்தையும் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவார்கள். இசைக்கலைஞர்கள் பாராட்டு பெறுவார்கள். 
 
அரசியலில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். உங்கள் தொண்டர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளியுங்கள். எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். 
 
மாணவர்கள், தங்களது படிப்பினால் உயர்ந்த மார்க் பெற்று தகுதியான பணிகளைச் செய்யும் சிறந்த வாய்ப்புகளை பெறுவார்கள். தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்கும். 
 
உத்திரம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள். எதிலும் கூடுதல் கவனம் தேவை. வீண் அலைச்சல், காரிய தடை தாமதம் உண்டாகலாம். நற்பெயரும் புகழும் உண்டாகும். வேலைக்கு செல்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். 
 
அஸ்தம்:
இந்த மாதம் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும். மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். 
 
சித்திரை 1, 2, பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். 
 
பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தா கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வரவும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்.