புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By K.‌P. Vidyadaran
Last Updated : வியாழன், 16 அக்டோபர் 2014 (15:23 IST)

சிம்மம் - ஐப்பசி மாத ராசி பலன்கள்

அச்சுறுத்தலுக்கு அஞ்சாத நீங்கள், அதிரடித் திட்டங்கள் தீட்டுவதிலும் வல்லவர்கள்.  உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் உங்கள் தனாதிபதியான புதன் செல்வதால் பணவரவு உண்டு. தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் குறையும். சந்தர்ப்ப, சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். உங்களின் பேச்சில் அனுபவ அறிவு மெய்ப்படும்.

மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். 20-ந் தேதி முதல் சுக்ரன் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வீடு, மனை மாறுவது நல்ல விதத்தில் முடியும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் உண்டு. மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் சூரியன் சனியுடன் சேர்ந்துள்ளதால் அலர்ஜி, இன்பெக்ஷன், பல் வலி, காது வலி, கழுத்து வலி வந்துப் போகும்.

இரத்த அழுத்தம் அதிகமாகும். தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். உணர்ச்சிவசப்பட்டு பேசி நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். உங்களுடைய ராசிக்கு 5-ம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். ஆனால் மகனுக்கு அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 8-ல் கேது நிற்பதால் அலைச்சல், வரவுக்கு மிஞ்சிய செலவுகள் வந்துப் போகும். 12-ல் குரு தொடர்வதால் அவ்வப்போது எதிர்காலம் பற்றிய பயம் வந்து நீங்கும்.

புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! பால்ய நண்பர்களால் உதவிகள் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்களால் உற்சாகமடைவீர்கள். உணவு, வாகன உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். பங்குதாரர்கள் உங்களைப் புரிந்துக் கொண்டு உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். கடந்த மாதத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், மரியாதைக் குறைவான சம்பவங்களெல்லாம் நீங்கும். கலைத்துறையினரே! தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். தன் பலம் பலவீனத்தை உணர்ந்து செயல்பட வேண்டிய மாதமிது.