புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By K.‌P. Vidyadaran
Last Updated : வியாழன், 16 அக்டோபர் 2014 (15:24 IST)

தனுசு - ஐப்பசி மாத ராசி பலன்கள்

எப்போதும் உதவும் குணம் கொண்ட நீங்கள், முடியாது என்பதையும் கடின உழைப்பால் முடித்துக் காட்டுபவர்கள். உங்களுடைய ராசியிலேயே உங்களின் பூர்வ புண்யாதிபதி செவ்வாய் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அவர்களால் அந்தஸ்து ஒருபடி உயரும். எதிர்பார்த்த பணமும் கைக்கு வரும். வழக்குகள் சாதகமாக முடியும். நிலம், வீடு, மனை வாங்குவது, விற்பது சாதகமாகும். பாகப்பிரிவினையும் நல்ல விதத்தில் முடிவாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

உங்கள் ராசிநாதன் குரு 8-ல் மறைந்திருப்பதால் செலவினங்கள் கூடிக் கொண்டேப் போகும். திடீர் பயணங்களும் உண்டு. ஆனால் குரு உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டில், வேற்றுமாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சூரியன் நுழைந்திருப்பதால் அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

சிலருக்கு வேலைக் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். கல்வியும் இனிக்கும். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு விரும்பிய படி திருமணம் முடிவாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். சனி சாதகமாக இருப்பதால் வாடிக்கையாளர்களை கனிவாகப் பேசி கவருவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும். தொலை நோக்குச் சிந்தனையாலும், அனுபவ அறிவாலும் சாதிக்கும் மாதமிது.