1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By

விருச்சிகம்: ஆவணி மாத ராசி பலன்கள்

(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) பலன்: இடமாற்றத்தை விரும்பும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் சுணங்கி கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறுவதோடு மட்டுமல்லாமல் மனதில் புது திட்டங்கள் உருவாகும். புதிய தொடர்புகளால் நன்மை உண்டாகும்.  வீண் பகை, மன சஞ்சலம், தேவையற்ற செலவு ஆகியன அகலும். மன சஞ்சலம் தீரும். பகைகள் தொல்லை தராமல் இருக்கும்.
தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக  இழுபறியாக  இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம்  வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு  புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம்.
 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசும் சூழ்நிலை ஏற்படும். கவனமாக இருப்பது நல்லது. மனைவி குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வயிறு தொடர்பான நோய் வந்து  நீங்கும்.
 
பெண்களுக்கு சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள்.  வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
 
கலைத்துறையினர் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். அதனால் வெளியூர்  பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை.
 
அரசியல்துறையினருக்கு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.
 
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி  இருக்கும்..
 
விசாகம் 4ம் பாதம்:
 
இந்த மாதம்  சந்தோசத்திற்கு குறைவிருக்காது. சூழல்கள் அனைத்தும் உங்களுக்கு சாதமாகவே இருக்கும். பணிக்குச் செல்லும் ஊழியர்கள்  தங்களின் உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். கணவன் - மனைவியரிடையே பரஸ்பர அன்னியோன்யம் நிலவும். வேலை  பார்க்கும் இடத்தில் தங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேரலாம்.
 
அனுஷம்:
 
இந்த மாதம்  ஆலய தரிசனம் மனதை ஒருநிலைப் படுத்தும். இது நாள் தடைப்பட்டிருந்த ஒரு நல்ல விஷயம் உங்களுக்கு வெற்றிகரமாக  அமையும். பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை உங்கள் சாமர்த்தியத்தால் வெற்றியாக மாற்றி விடுவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி  ஒன்று வரும்.
 
கேட்டை:
 
இந்த மாதம் சுபகாரியங்கள் நடத்துவது பற்றிய பேச்சுவார்த்தை நிகழும். சிலருக்கு ஆண் வாரிசு உண்டாகக் கூடிய வாய்ப்புள்ளது. பழைய கடன்கள் சிறிது சிறிதாக அடைபடத் தொடங்கும். நடக்கக்கூடிய நிகழ்வுகள் உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். நீங்கள் நிதானத்தை  கடைப்பிடித்து எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்ய வேண்டாம்.
 
பரிகாரம்: செவ்வாய் கிழமை விரதம் இருந்து நவகிரகத்தில் செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மையும் உண்டாகும். உடல்  ஆரோக்கியம் கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 26, 27.
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 19, 20; செப்டம்பர் 15, 16.