1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (17:29 IST)

தனுசு: ஆனி மாத ராசிப் பலன்கள்

கிரகநிலை: ராசியில் சனி, கேது - ருண ரோக ஸ்தானத்தில்  சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன்,  ராகு - விரய ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) என கிரகங்கள்  வலம் வருகின்றன.
பலன்:
 
உங்களுக்கென்று ஒரு வட்டம் போட்டு அதில் வாழ  ஆசைப்படும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் பல  வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும்.  மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள்.  எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.  பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.  பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும்.
 
குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலைதூக்கி பின்னர்  சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை  உண்டாகும்.  பிள்ளைகளால் செலவும் ஏற்படும்.  உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
 
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள்  கடுமையான உழைப்பிற்கு பின்  நல்ல பலன் பெறுவார்கள், போட்டிகள் விலகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து வரும்  தகவல்களால் மனதிற்கு நிம்மதி இருக்காது.
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய  வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவியும் இருக்கும். மேலிடத்திலிருந்து வரும் தகவல்கள் உங்கள் எதிர்காலத்திற்கு தேவையானதாக இருக்கும்.
 
கலைத்துறையினர் முக்கியமான நிகழ்ச்சிகளில் கலந்து  கொண்டு பாராட்டு பெறுவீர்கள். வெளிநாடு பயணங்கள் வெற்றிகரமாக இருக்கும். தீவிர முயற்சிகளால் வெற்றி  காண்பீர்கள்.
 
அரசியல் துறையினர் வெற்றியை படிபடியாக எட்டுவீர்கள்.  அனைவரின் பாராட்டும் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எதிரிகளால் மறைமுக தொல்லைகள் உண்டாகும். வீண்  அலைச்சல்களால் மனம் வருத்தப்படும்.
 
பெண்களுக்கு அறிவுபூர்வமாக செயல் பட்டு சில முக்கிய  முடிவு எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இழுபறியாக  இருந்து வந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர்  விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
 
மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது  செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம்  கூடும்.
 
மூலம்:
 
இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம்.  உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க  வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம்  இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள  வேண்டாம்.
 
பூராடம்:
 
இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண்  சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி  வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம  ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும்  வாகனங்கள் வாங்கலாம்.
 
உத்திராடம் 1ம் பாதம்:
 
இந்த மாதம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித்  தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில  வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.
 
பரிகாரம்: நமசிவாய மந்திரத்தை உச்சரித்து கொண்டே  இருங்கள். தீவினை நெருங்காது.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 28, 29.