வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By papiksha
Last Updated : செவ்வாய், 7 ஜனவரி 2020 (16:11 IST)

இளைஞர்களை குறிவைக்கும் "நெவெர் கிஸ் யுவர் பெஸ்ட் ஃபிரண்ட்" - ட்ரைலர் இதோ!

சமீப நாட்களாகவே வளர்ந்து வரும் இந்த டெக்னாலெஜி உலகில் திரைப்படங்களுக்கு இணையாக வெப் தொடர்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக, லஸ்ட் ஸ்டோரிஸ் , கோஸ்ட் ஸ்டோரிஸ் உள்ளிட்ட தொடர்கள் அமோக வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் தற்போது ZEE5 அவர்களின் புதிய தொடர் "நெவர் கிஸ் யுவர் பெஸ்ட் பிரண்ட்" என்ற பெயரில் தொடங்க தயாராக உள்ளது, இது அதே பெயரில் சம்ரித் ஷாஹியின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த வெப் சீரிஸை ஆரிஃப் கான் இயக்கியுள்ளார். சரிதா ஏ தன்வார் மற்றும் நிராஜ் கோத்தாரி ஆகியோர் தயாரிக்கின்றனர்.
 
மொத்தம் 10-எபிசோட் கொண்ட இந்த தொடரில்,  ஐந்து வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் இரண்டு சிறந்த நண்பர்களான டேனி மற்றும் சுமர் ஆகியோரைச் சுற்றி இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது. நட்பின் விதிகளை மறுவரையறை செய்யும் இக்கதையில் நகுல் மேத்தா மற்றும் அன்யா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.